முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை


முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 6 Nov 2019 3:17 PM IST (Updated: 6 Nov 2019 3:17 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலைகுறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பு குறை தீர் கூட்டத்தில்  பெறப்பட்ட மனுக்களின் நிலைகுறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். குறை தீர் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் அதன் முன்னேற்றங்கள் பற்றி கேட்டறிந்தார்.

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தில் மொத்தம் 9,72,216 மனுக்கள் பெறப்பட்டு, 5,11,186 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, 4,37,492 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

மீதமுள்ள 23 ஆயிரத்து 538 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த வார இறுதிக்குள் முடிவு செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள 23,538 மனுக்கள் மீது வரும் 15ம் தேதிக்குள் உ​ரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் வட்டார அளவில் சேலம் மாவட்டம் கொங்கனாபுரத்தில் வரும் 9-ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது அதை தொடர்ந்து மாவட்டந்தோறும் வட்டார அளவில் 20ம் தேதிக்குள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

Next Story