உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக தான் உள்ளோம் - கமல்ஹாசன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக தான் உள்ளோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கேள்வி: 60 ஆண்டு கால திரைப்பயணம் நிறைவு. அதில் அரசியல் பயணமும் உள்ளது... இரண்டிற்குமான வேறுபாடு?
கமல்ஹாசன் பதில்: நடிப்பு, கலை என்பது என் தொழில், அரசியல் என்பது மக்களுக்காக செய்யும் எனது கடமை.
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் எந்த நிலையில் உள்ளது?
கமல்ஹாசன் : உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக தான் உள்ளோம்; அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
திருவள்ளுவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள், திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல, அவர் ஒரு பொதுக்கருத்து என்பது தான் உண்மை, அவருக்கு வண்ணம் பூச தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story