7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை


7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
x
தினத்தந்தி 7 Nov 2019 10:35 AM GMT (Updated: 7 Nov 2019 10:35 AM GMT)

7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று  தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் தலைமை செயலாளர் சண்முகமும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் புதிய நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட 8,835 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதால், சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story