மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம் : மாஃபா பாண்டியராஜன்


மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம் : மாஃபா பாண்டியராஜன்
x
தினத்தந்தி 8 Nov 2019 4:56 AM GMT (Updated: 2019-11-08T10:26:27+05:30)

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பான விவாதம் மற்றும் அது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர்  மாஃபா  பாண்டியராஜனை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 
பின்னர் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி  தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,  “மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம். ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை என்பதால் சந்தேகம் எழுப்பினேன். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 2 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும்” என்றார்.

Next Story