மாநில செய்திகள்

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு + "||" + contest local government elections on behalf of DMK From the 14th of November Optional petition

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும்.
சென்னை

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில், வரும் 16ம் தேதி பொதுக் கூட்டங்களை நடத்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள் தோறும் விநியோகிப்பது என்றும், தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரசாரங்கள் மேற்கொள்வதென்றும் திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: கு.க செல்வம்
திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: என்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.
2. திமுகவில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் நீக்கம்
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ, கு.க செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.
3. என்னை குறித்த தில்லு முல்லு பிரசாரம் எடுபடாது - திமுக பொருளாளர் துரைமுருகன்
என்னை குறித்து பரப்பப்படும் தில்லு முல்லு பிரசாரம் எடுபடாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
4. திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை - திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம்
திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை என்று திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
5. தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...