மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி + "||" + Interview with the first-minister of the coalition continues in the local elections as parliamentary elections

நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றிடம் இல்லை

கேள்வி:- அ.தி.மு.க.வில் வெற்றிடம் இருப்பதாக கூறி வருகிறார்களே?


பதில்:- அ.தி.மு.க.வை பொறுத்தவரை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை என்று நிரூபித்து விட்டோம்.

கேள்வி:- புகழேந்தி உள்பட அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைய முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- புகழேந்தி இன்னும் அ.தி.மு.க.வில் இணையவில்லை. அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைய கடிதம் கொடுத்தால் அதுகுறித்து தலைமைக்கழகம் பரிசீலித்து முடிவு செய்யும்.

கூட்டணி தொடரும்

கேள்வி:- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும்?

பதில்:-உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். குறித்தகாலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பீர்கள்?

பதில்:- உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.

கேள்வி:- சென்னையில் மாசு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- சென்னையில் மாசு குறைவு என்று வருவாய்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.

மாமல்லபுரம்

கேள்வி:- மாமல்லபுரத்தை பெரிய சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:-நிச்சயமாக அழகுபடுத்தப்படும். மாமல்லபுரம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து மிகச் சிறப்பாக, அழகாக, தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி
குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
2. அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்க தயார் அமைச்சர் காமராஜ் பேட்டி
அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
3. விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் வருகிற 14-ந்தேதி பேரணி சஞ்சய்தத் பேட்டி
விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் வருகிற 14-ந்தேதி சோனியா காந்தி தலைமையில் பேரணி நடைபெற இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.
4. மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்தும் ப.சிதம்பரம் பேட்டி
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்தும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
5. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் டி.டி.வி.தினகரன் பேட்டி
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அரூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.