மாநில செய்திகள்

வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன் + "||" + From Vellore Prison On a monthly parole the terrorist came out

வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்

வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்
வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன், போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தை உடல்நிலை மோசமாக உள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன்பொருட்டு அவரை உடன் இருந்து பார்த்துக் கொள்வதற்காகவும் சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவும் தமிழக அரசிடம் பேரறிவாளன் பரோல் கோரியிருந்தார்.

அதை ஏற்று அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  

தொடர்புடைய செய்திகள்

1. 2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் சிறையில் அடைப்பு
2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனது மகன் விரைவில் விடுதலை ஆவார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.
2. பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் - பரோல் முடிந்து மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி
பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் என்று மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.
3. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு உத்தரவு
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட முருகன் மறுப்பு
வேலூர் மத்திய சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.
5. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக பரோலில் விடுவிப்பு - ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் பலத்த போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை