உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் - தொல். திருமாவளவன்


உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் - தொல். திருமாவளவன்
x
தினத்தந்தி 12 Nov 2019 7:59 AM GMT (Updated: 12 Nov 2019 7:59 AM GMT)

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், இன்று  திமுக தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனும் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

அப்போது விரைவில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மு.க ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசவில்லை என கூறினார். அதே சமயம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக தலைமையில் எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story