மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் + "||" + It is not known what actor Rajinikanth claims; Minister Dindigul Srinivasan

நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வெள்ளி கிழமை காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல தனக்கு பா.ஜ.க. சாயம் பூச முயற்சி நடப்பதாக கூறினார். நடிகர் ரஜினிகாந்தின் பேட்டி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறிப்போனது.

இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், நான் எப்போதும் வெளிப்படையாக பேசி  வருகிறேன். நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என கூறினார்.

இந்நிலையில், தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதன்பின்னர் அவர், கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊருக்குள் யானைகள் வராமல் இருக்க அகழிகள் அமைக்கப்படும்.  கொடைக்கானல் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது காரை இயக்கிய நடிகர் ரஜினிகாந்த்!
நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் காரை இயக்கியிருக்கிறார்.
2. உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசு - ரஜினிகாந்த்
எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு - போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர், திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? எழும்பூர் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரி எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
5. நடிகர் ரஜினிகாந்துடன் ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சந்தித்து பேசினார்.