டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
x
தினத்தந்தி 12 Nov 2019 6:59 PM IST (Updated: 12 Nov 2019 6:59 PM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

சென்னை,

2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப்பணி, நில அளவை, நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தலைமை செயலகப்பணி மற்றும் சட்டமன்ற பேரவை செயலக பணிகளில் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.

மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் தேர்வு நடந்து முடிந்து குறைந்த நாட்களில் (72 நாட்களில்) வெளியானது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

Next Story