ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்


ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 Nov 2019 8:23 AM GMT (Updated: 14 Nov 2019 10:01 AM GMT)

ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்த்து, அனைவரையும் சம உரிமையுடன் நடத்த வேண்டும்.

சமமான உயர்கல்வியுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன செய்ய வேண்டும். மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை நியாயமான, நேர்மையான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

மாணவி தற்கொலை குறித்த வழக்கின் விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னை ஐஐடியில் இருந்து இத்தகைய சர்ச்சை எழுவது புதிது அல்ல. 

மாணவி பாத்திமா லத்தீப்பின் பெற்றோரின் கூற்று, தமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story