ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய செயலாளர் எல்.சுப்பிரமணியன்


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய செயலாளர் எல்.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 15 Nov 2019 2:04 AM IST (Updated: 15 Nov 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய செயலாளராக எல்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளிக்கல்வி ஆணையர்

கலை மற்றும் கலாசார ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்த இயக்குனர் வி.கலையரசி, கலை மற்றும் கலாசார இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர், விடுமுறையில் இருந்து திரும்பியதைத் தொடர்ந்து மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணைய செயலாளர்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் எல்.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனராக (பொறுப்பு) இருந்த எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகள் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்தராவ், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஏ.அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் கலெக்டர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஏ.சிவஞானம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஆர்.கண்ணன், விருதுநகர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் சஞ்சன் சிங் ஆர்.சவான், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டார்.

ஆதிதிராவிடர் நல ஆணையர்

வேளாண்மைத் துறை சிறப்புச் செயலாளர் சி.முனியநாதன், ஆதிதிராவிடர் நல ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பையும் சி.முனியநாதன் வகிப்பார்.

ஆதிதிராவிடர் நல இயக்குனர் கே.வி.முரளிதரன், டான்செம் நிறுவன மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) பி.குமாரவேல் பாண்டியன், அங்கு துணை ஆணையராக (பணி) மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story