புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது:-
தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி, கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா, செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story