தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும் - அமைச்சர் ஜெயக்குமார்


தேர்தல் வந்தாலே  திமுகவிற்கு காய்ச்சல்  வந்துவிடும் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 16 Nov 2019 12:24 PM IST (Updated: 16 Nov 2019 12:26 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ்  பயனாளிகளுக்கு மொத்தம், சுமார் 2 கோடி ரூபாய்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில்  அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 தென்பெண்ணை ஆறு விவகாரத்தில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். ஆடத்தெரியாதவன் அரங்கு பத்தவில்லை என்ற கதையாக தேர்தல் வந்தாலே  திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்.

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக அவரது தந்தையே கூறியிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story