மாநில செய்திகள்

அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் - தமிழிசை சவுந்தரராஜன் + "||" + As a child I am running to Tamil Nadu tamilisai soundararajan

அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் - தமிழிசை சவுந்தரராஜன்

அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் - தமிழிசை சவுந்தரராஜன்
அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னை தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:- 

மருத்துவர் என்ற கிரீடத்தை கழட்டி வைத்து விட்டு தான் பாஜக தொண்டராக கமலாலயத்துக்குள் நுழைந்தேன். 20 ஆண்டுகள் உழைப்பிற்காக கவர்னர் என்ற கிரீடத்தை கட்சி கொடுத்திருக்கிறது.

எப்போதும் கர்வம் தலைக்கேறாமல் இருப்பேன், மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் நான் இல்லை. தெலுங்கானா ராஜ்பவனை மக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியிருக்கிறேன், மக்கள் தான் எல்லாம்.  அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.