தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு


தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 19 Nov 2019 9:50 AM GMT (Updated: 19 Nov 2019 9:50 AM GMT)

தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தான குமார் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தீர்ப்பை தள்ளிவைத்து கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கனிமொழி தாக்கல் செய்த மனு,  தீர்ப்புக்காக நீதிபதி முன்பு விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்குவதாக கூறினார்.  

இதன்படி, மேற்கூறிய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கனிமொழியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், வெற்றியை எதிர்க்கும் சந்தான குமாரின் மனு மீது விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

Next Story