நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் - கமலஹாசன் பேட்டி
நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
படிக்காத எனக்கு முதன் முறையாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி சொன்ன அதிசயம் உண்மை தான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்.
தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்சே நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story