சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை


சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
x
தினத்தந்தி 21 Nov 2019 2:12 AM GMT (Updated: 21 Nov 2019 2:12 AM GMT)

சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் இன்று 2வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைமாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.  இதன்படி, பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு ரூ.77.13க்கும், டீசல் ரூ.69.59க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story