மாநில செய்திகள்

ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி + "||" + Seeman retort Rajinikanth's miracle claim

ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி

ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி
ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக அரசியலில், 2021 ஆம் ஆண்டு அற்புதம், அதிசயம்  நிகழும் என்று பேசிய ரஜினிகாந்த்,  தேவையேற்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணைவோம்  எனக்கூறியது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. ரஜினியின் கருத்துக்கு ஆளுங்கட்சியான அதிமுக, கடும் எதிர்வினைகளை ஆற்றியதோடு, 2021 ஆம் ஆண்டிலும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்பதுதான், ரஜினி குறிப்பிட்ட அதிசயம் என்று கூறியது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “  ஆம்! அதிசயம் நிகழும். 'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும், சமூக வலைத்தளங்களிலும் அனல் பறக்கும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
திமுக மற்றும் தி.க.வினருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளதை பார்க்கும்போது சங்கடமாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
2. நடிகர் ரஜினிகாந்திற்கு விசா மறுப்பு என்பது வதந்தி ; நமல் ராஜபக்சே
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு விசா அனுமதி மறுப்பு என்று வெளியான செய்தி வதந்தியாகும் என நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார்.
3. நடிகர் ரஜினிகாந்துடன், பேட்மிண்டன் வீராங்கனை சிந்து சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை, பேட்மிண்டன் வீராங்கனை சிந்து சந்தித்தார்.
4. சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் சந்திப்பு.
கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ், சென்னையில் ரஜினியை சந்தித்து அவரை நெகிழ வைத்திருக்கிறார்.
5. தலைவனை தேர்வு செய்வதில் கேரளாவில் இருக்கும் புரிதல் தமிழகத்தில் இல்லை, மதுரையில் கொட்டும் மழையில் சீமான் பேச்சு
தலைவனை தேர்வு செய்வதில் கேரளாவில் இருக்கும் புரிதல் தமிழகத்தில் இல்லை என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடி சீமான் பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை