தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி


தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 22 Nov 2019 6:14 AM GMT (Updated: 22 Nov 2019 9:33 AM GMT)

தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி  மாவட்டம் உதயமானது . தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் காலை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். ராமநதி - ஜம்பு நதி இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
செண்பகவல்லி அணை - கன்னியா மதகு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.

நாடே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை சொத்து உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான் சட்டமன்றத்தில்  110-விதியின் கீழ்  453 அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளேன். 368 அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில்  88 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றபட்டு உள்ளன.  280 திட்டங்கள் பெரும் பகுதி முடியும் தருவாயில் உள்ளன. 74  திட்டங்கள் திட்ட அனுமதிக்காக பரிசீலனையில் உள்ளன.

சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் ஏழை மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை எந்த விதத்திலும் நிராகரிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 மாத‌த்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம்.

எதிர்க்கட்சி மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஒரு குடும்பத்தை தான் வளர்த்தது என கூறினார்.

Next Story