கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத்தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவில் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story