வங்கிகளை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் பேச்சு


வங்கிகளை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 23 Nov 2019 2:40 PM GMT (Updated: 23 Nov 2019 2:40 PM GMT)

வங்கிகளை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 116-ம் ஆண்டு விழா கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- 

ரிசர்வ் வங்கி மூலம் இங்குள்ள வங்கிகளை உலகத் தரத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எங்கேயோ ஓரு சிறிய கூட்டுறவு வங்கி செய்யும் மோசடியால் மக்களுக்கு வங்கிகள் மீது நம்பிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஏதோ ஓர் இடத்தில் யாரோ ஒருவர் செய்யும் தவறு மொத்த வங்கிகள் மீதும் சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினால் அது அவர்களுக்கும் நாட்டுக்கும் கெடுதலாக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story