தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணய அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணய அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Nov 2019 8:37 PM GMT (Updated: 23 Nov 2019 8:37 PM GMT)

தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணய அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை இந்திய மருத்துவக்குழுவின் ஆட்சிக்குழு நிர்ணயித்துள்ளது. ஆட்சிக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி, தனியார் கல்லூரிகளில் உள்ள 50 சதவீத மருத்துவப்படிப்பு இடங்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.8 லட்சமும், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.30 லட்சம் வரையும், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு கல்லூரி நிர்வாகமே விருப்பம்போல் கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் சலுகை காட்டப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தான் பயனளிக்குமே தவிர மக்களுக்கு பயனளிக்காது.

எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதேபோல், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுவதுடன், அனைத்து இடங்களும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாநில அரசின் மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட வேண்டும். அத்துடன், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும், மருத்துவ கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story