உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்; அதிமுக விதிகளில் திருத்தம்


உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்; அதிமுக விதிகளில் திருத்தம்
x
தினத்தந்தி 24 Nov 2019 12:34 PM IST (Updated: 24 Nov 2019 12:34 PM IST)
t-max-icont-min-icon

உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று அதிமுக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

தொடர்ந்து, அதிமுகவின் சட்ட விதிகளில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி,  அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர்கள் 5 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவோர்களும் 5 ஆண்டுகள் அதிமுக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

Next Story