எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு


எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 24 Nov 2019 9:10 PM IST (Updated: 24 Nov 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வெற்றி விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை ஆகும். உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களைத்தருபவர்கள் தமிழ்திரையுலகினர். உலகப்படங்களுக்கு நிகராக தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

தீய பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்க வேண்டாம், படங்களையும் எடுக்க வேண்டாம்.  எம்.ஜி.ஆரை போன்று நல்ல கருத்துகளை சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். வெற்றி பெறுவதற்கு நாடகத்தில் எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சியும், பயிற்சியும் தான் காரணம். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம். நகைச்சுவை படங்களை பார்க்கும் போது மனதிலுள்ள கவலைகள் நீங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story