மாநில செய்திகள்

பொன்னேரி அருகே ரெயிலை கவிழ்க்க சதி : நூலிழையில் தப்பிய பினாங்கினி விரைவு ரெயில் + "||" + Plot to topple train near Ponneri:  Pinangini Quick Train, which survived

பொன்னேரி அருகே ரெயிலை கவிழ்க்க சதி : நூலிழையில் தப்பிய பினாங்கினி விரைவு ரெயில்

பொன்னேரி அருகே ரெயிலை கவிழ்க்க சதி : நூலிழையில் தப்பிய பினாங்கினி விரைவு ரெயில்
பொன்னேரி அருகே ரெயிலை கவிழ்க்க சதி நடந்து உள்ளது. நூலிழையில் பினாங்கினி விரைவு ரெயில் தப்பியது.
சென்னை,

சென்னையிலிருந்து ஐதராபாத் செல்லும் பினாங்கினி விரைவு ரெயில்,  பொன்னேரி அருகே உள்ள ஆரணி ஆற்று பாலத்தில் சென்றபோது, தண்டவாளத்தில் பலத்த சத்தத்துடன் என்ஜின் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், கவரப்பேட்டையில் ரெயிலை நிறுத்தினார். அதோடு, கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்தார். 

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்த சென்னை ரெயில்வே பணிமனை பொறியாளர்கள், ரெயில் தண்டவாளம் மற்றும் சக்கரத்தில் பேரிங் காந்தம் ஒட்டிய தடயத்தை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை கோட்ட ரெயில்வே பாதுகாப்புத்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆய்வில், ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது தெரியவந்தது. 

ஆரணி ஆற்றுப் பாலத்தில் ரெயில் மெதுவாகச் சென்றதால், பயணிகள் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, ரெயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தேமுதிக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி
சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதத்தில் தேமுதிக பிரமுகரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது
காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த சமூக வலைதளத்தில்புகைப்படம் வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டார்.
3. கடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.63-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.11-க்கும் விற்பனையாகிறது.