ஜெயலலிதா வழியில் சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் -முதலமைச்சர் பழனிசாமி


ஜெயலலிதா வழியில் சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் -முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 25 Nov 2019 9:58 AM GMT (Updated: 2019-11-25T15:28:39+05:30)

ஜெயலலிதா வழியில் சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழக முன்னாள் அமைச்சரான ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் ராமசாமி படையாச்சியாரின் வெண்கல திருவுருவ சிலை மற்றும் நூலகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் துணிச்சலாக இருந்தவர் ராமசாமி படையாட்சியார், மக்களை மனிதநேயத்துடன் அணுகியவர் ராமசாமி படையாட்சியார், வாழும் போது வரலாறாக வாழ்ந்தவர் ராமசாமி படையாட்சியார் , ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் ராமசாமி படையாட்சியார், கடலூரில் இருப்புப் பாதை மற்றும் மருத்துவமனை அமைக்க தமது நிலத்தை வழங்கியவர் ராமசாமி படையாட்சியார் என்றும் முதலமைச்சர் கூறினார். 

வாக்குறுதி அளித்து அதை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி அதிமுக ஆட்சி, ஜெயலலிதா வழியில் சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என கூறினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

Next Story