மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின் + "||" + Mk Stalin tweets about Supreme court verdict on Maharastra situation

உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின்
உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மராட்டியத்தில்  முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்த சூழலில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “ மகாராஷ்டிரா சட்டமன்றத்தில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.

ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ’விகாஸ் துபே’ போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை; உச்ச நீதிமன்றத்தில் உ.பி போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல்
விகாஸ் துபே போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
2. கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது! - மு.க ஸ்டாலின் டுவிட்
கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது! என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம்; மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. தமிழகத்தில் மதுக்கடைகள் நாளை திறப்பு- டாஸ்மாக் நிர்வாகம்
தமிழகத்தில் மதுபானக்கடைகள் நாளை திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5. பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் உரிமைகள் பறிப்பு: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம்
பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.