மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு எதிராக ஜெ.தீபா வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி + "||" + Biography of Jayalalithaa for the film Against high court permits seepa

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு எதிராக ஜெ.தீபா வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு எதிராக ஜெ.தீபா வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கும் படங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

இதே போல் கவுதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் விழா: அ.தி.மு.க. அலுவலகத்தில் 72 கிலோ ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க. அலுவலகத்தில் 72 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2. ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
3. ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
4. ஜெயலலிதா பிறந்தநாள் விழா; அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கிய கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
5. ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது - திருமாவளவன் பேட்டி
ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-