குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 29-ந் தேதி முதல் வழங்கப்படும்


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 29-ந் தேதி முதல் வழங்கப்படும்
x
தினத்தந்தி 27 Nov 2019 9:49 AM GMT (Updated: 27 Nov 2019 9:49 AM GMT)

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 29ந் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை நேற்று தொடங்கி வைத்து பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பின்னர் விழாவில் பேசிய அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கப்படும். அரிசி ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு இந்த தொகை வழங்கப்படும். மேலும் பொங்கல் வைப்பதற்கான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சையுடன் கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார்.

இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வருகிற 29-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இதற்காக நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பணம், பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

Next Story