மாநில செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி + "||" + 7 statues from Australia to come to India; Pon.Manickavel

ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி

ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி
ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை,

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.  அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரிக்கு அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேலின் பதவி காலம் நவம்பர் 30ந்தேதியுடன் முடிவடையவுள்ளது. 

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என சுட்டி காட்டி, அதனால் பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு குறித்து எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.  இதனை அடுத்து சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், பொன்.மாணிக்கவேல் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட 2 துவார பாலகர் சிலைகளை ஆஸ்திரேலிய பிரதமர் வருகிற ஜனவரியில், இந்திய பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க இருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கை தோண்டி எடுத்து துவார பாலகர் சிலையை கண்டுபிடித்துள்ளோம்.  ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா? போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி
கைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
2. உள்ளாட்சி தேர்தலில் கட்சி விதிகளை மீறி போட்டியிட்டவர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் கட்சி விதிகளை மீறி போட்டியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
3. மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் கார்த்தி சிதம்பரம் பேட்டி
மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
4. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது அமைச்சர் பேட்டி
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.
5. சுயேச்சை உறுப்பினர்களை இழுக்கும் விதமாக ‘அ.தி.மு.க. குதிரை பேரத்தில் ஈடுபடாது’ அமைச்சர் பேட்டி
குதிரை பேரம் பேசி சுயேச்சை உறுப்பினர்களை இழுக்கும் வேலையில் அ.தி.மு.க. ஈடுபடாது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.