“அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை” - வானதி சீனிவாசன் பேட்டி

“அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று வானதி சீனிவாசன் கூறினார்.
சென்னை,
பா.ஜ.க. துணைத்தலைவர் எம்.என்.ராஜா, செயலாளர்கள் கரு.நாகராஜன், ஆர்.நந்தகோபால், கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாகூர் கூறியது, கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் கட்சி தலைமை நல்ல முடிவு எடுக்கும். தமிழக பா.ஜ.க. தலைவரை உடனடியாக அறிவித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கட்சி இல்லை. தலைவர் யார்? என்பதை எப்போது வேண்டுமானாலும் கட்சி தலைமை அறிவிக்கலாம். அது யாராக இருந்தாலும், தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து களப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும், குழப்பமும், சிக்கலும் இல்லை. எதிர்காலம் பற்றி இப்போது சொல்லமுடியாது.
30-ந்தேதி (நாளை) பா.ஜ.க. தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளோம். அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் சென்று, அங்கு மாவட்ட கட்சி அலுவலகம் அமையவுள்ள இடத்தில் 15 மாவட்ட தலைமை அலுவலகங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதனைத்தொடர்ந்து மாநில-உயர்மட்டக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story