பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் ; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்


பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் ; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Nov 2019 3:01 AM GMT (Updated: 29 Nov 2019 4:32 AM GMT)

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை 9.45 மணிக்கு நடைபெறும் விழாவில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 இந்த விழாவுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் பொங்கல் பரிசு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

Next Story