கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உதவியாளர் பணிக்கான எழுத்துதேர்வு; நாளை நடக்கிறது

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் (பொறுப்பு) டி.குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் எழுத்துதேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு கிடைக்க பெறாதவர்கள் http://139.59.84.192/JA/download/index.php என்ற இணையதள முகவரியில் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டில் திருத்தம் அல்லது பிழைகள் ஏதேனும் இருப்பின் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத செல்லும் போது உரிய அசல் ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.
கடந்த 17-ந் தேதி கணினி இயக்குபவர் பதவிக்கு நடந்த எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த கட்ட தேர்வான கணினி திறன் தேர்வுக்கு தகுதியானவர்கள் விவரம் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் மதிப்பெண் விவரம் labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) கணினி திறன் தேர்வு நடைபெற உள்ள விவரம் தனியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story