சென்னை, கடலூர், நாமக்கல் பகுதிகளில் கனமழை


சென்னை, கடலூர், நாமக்கல் பகுதிகளில் கனமழை
x
தினத்தந்தி 30 Nov 2019 1:42 PM GMT (Updated: 2019-11-30T19:12:49+05:30)

சென்னை, கடலூர் மற்றும் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது.

சென்னை,

சென்னையில் 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், கே.வி.குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் கனமழை பெய்தது.  புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.  திருவண்ணாமலை, கலசப்பாக்கம், நாயுடுமங்கலம், கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்துள்ளது.  பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்த‌தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் இன்று மாலை கனமழை பெய்தது.  இதுவரை 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.

கடலூரில் கனமழை காரணமாக பெரிய பட்டு மற்றும் பூச்சி மேடு இடையேயான தரைப்பாலம் உடைந்துள்ளது.  15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.  மாலை 4 மணி வரை கடலூரில் 11.4 செ.மீ., நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

Next Story