ஹஜ் பயணத்திற்கு 5-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; தமிழக அரசு அறிவிப்பு
அரசு செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
2020-ம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் ஹஜ் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான கடைசி நாள் வருகிற 5-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமப்படுபவர்கள் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பூர்த்திசெய்த பின், விண்ணப்பங்களுடன் கூடிய பாஸ்போர்ட் நகல், (20-01-2021 வரை செல்லத்தக்கது) வங்கி கணக்கு புத்தகம், வெள்ளை நிற பின்னணியுள்ள புகைப்படம், முகவரி ஆதாரம் மற்றும் பணம் செலுத்திய விவரங்களை 5-ந் தேதி வரை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story