வடகிழக்கு பருவமழை தீவிரம்; தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழைப்பதிவு


வடகிழக்கு பருவமழை தீவிரம்; தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழைப்பதிவு
x
தினத்தந்தி 1 Dec 2019 5:24 AM GMT (Updated: 1 Dec 2019 5:24 AM GMT)

தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது.

இதன்படி, தூத்துக்குடியில் 16 செ.மீ., சாத்தான்குளம் - 18 செ.மீ., குலசை - 14 செ.மீ., திருச்செந்தூர் - 10 செ.மீ. மழை பதிவு.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.

நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ., பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ. மழை பதிவு.

ராமநாதபுரம்: ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ. மழை பதிவு.

தஞ்சை: அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டில் 10 செ.மீ. மழையும், வெட்டிக்காடில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதுதவிர, திருவண்ணாமலை: வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

மதுரை: மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சென்னை: மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 649 மில்லியன் கன அடியிலிருந்து 749 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூர், கிண்டியில் 11 செ.மீ., மயிலாப்பூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நெல்லையில் மணிமுத்தாறு 15 செ.மீ., அம்பாசமுத்திரம் 9.5 செ.மீ., பாளையங்கோட்டை 8 செ.மீ., ராதாபுரம் 4.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Next Story