தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை; வானிலை ஆய்வு மையம்


தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை; வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 1 Dec 2019 7:49 AM GMT (Updated: 1 Dec 2019 7:49 AM GMT)

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.  ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  

இதேபோன்று புதுச்சேரி, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.

லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Next Story