உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
டிசம்பர் 7-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக அறிவிக்கப்படும். டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம். அதன்படி டிசம்பர் முதல் வாரம் முடிவதற்குள் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்தால் நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிசம்பர் 2-ல் தேர்தல் தேதியை அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 13-க்குள் தேர்தல் தேதியை அறிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story