தமிழகத்திற்கு "ரெட் அலர்ட்"


தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
x
தினத்தந்தி 1 Dec 2019 5:30 PM IST (Updated: 1 Dec 2019 6:08 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மழை
பெய்துள்ளது

சென்னை மட்டுமின்றி காஞ்சீபுரம், திருவள்ளூர்,வேலூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி,தென்காசி, ராமநாதபுரம்,
கடலூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்தநிலையில்,  தமிழகத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதேசமயம் இந்த ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதற்கும் பொருந்தாது. இது ஒரு சில மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிகனமழை பெய்யும் என்பதற்காக கூறப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறாவளிக் காற்றுவீசும் என்பதால் குமரி, லட்சத்தீவு கடல் பகுதிக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story