சென்னை, அண்ணா மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு
சென்னை, அண்ணா மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 4 கல்லூரிகள், வளாகங்களின் தேர்வுகள் தொடர் மழையால் இன்று ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பதிவாளர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story