ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவிப்பு + "||" + Holiday for schools in Ranipet district; Collector Divyadarshini announced
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராணிப்பேட்டை,
தமிழகத்தில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்ய தொடங்கியது. வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியால், மழை தீவிரமடைந்து உள்ளது.
பலத்த மழை காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர் மழையால், நீலகிரி மாவட்டத்தில் குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனை ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்து உள்ளார்.