மாநில செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி : வீட்டின் உரிமையாளர் கைது + "||" + RainDeath Homeowner arrested for building wall

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி : வீட்டின் உரிமையாளர் கைது

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி : வீட்டின் உரிமையாளர் கைது
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை,

கோவை மேட்டுப்பாளையத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்தநிலையில் 17 பேரை பலிகொண்ட சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இதனிடையே மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரி போராடிய 24 பேரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்  வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதனையடுத்து கைதான 24 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.