மாநில செய்திகள்

மே மாதம் நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் 31-ந்தேதி கடைசி நாள் + "||" + To be held in May For the Neet to exam Apply

மே மாதம் நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் 31-ந்தேதி கடைசி நாள்

மே மாதம் நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் 31-ந்தேதி கடைசி நாள்
மருத்துவபடிப்புகளில் சேருவதற்காக அடுத்த ஆண்டு (2020) மே மாதம் ‘நீட்’ தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அடுத்த கல்வி ஆண்டில் (2020-21) மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு அடுத்த ஆண்டு (2020) மே மாதம் 3-ந்தேதி நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த இருக்கிறது.


‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும்.

விண்ணப்பதாரர்கள் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந் திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் விதிவிலக்கு இருக்கிறது.

தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (‘ஹால் டிக்கெட்’) அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ததும், விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான உறுதிபடுத்தப்பட்ட பக்கம் வந்தபிறகே முழுமையாக விண்ணப்பித்ததற்கான அர்த்தம் ஆகும். மேலும், பணம் கட்டியதற்கான ஆதாரத்துடன் 4 பிரதிகள் விண்ணப்பதாரர்கள் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.