சென்னையில் காலையில் சில இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கியது. வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர் மழைக்கு வழிவகுத்தது. கடலூர், ராமநாதபுரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
கனமழையால் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
தொடர் மழையால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் ஒருபுறம் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், கனமழையால் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னையில் நேற்று முன்தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழையால் விடுமுறை விடப்பட்டது. இதன்பின்பு நேற்று மழைப்பொழிவு தீவிரம் குறைந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்துள்ளது. சென்னையில் வேப்பேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், பொன்னேரி, எழும்பூர் மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
Related Tags :
Next Story