தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் காலமானார்.
தஞ்சாவூர்,
இந்தியாவின் பழமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 93) இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
1926-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர், விருத்தாசலம் தேவாரப் பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், கட்டளைத்தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரச்சார நிலையத்தில் பணியாற்றி வந்தார். 1971-ம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்தின் 26-வது மடாதிபதியாக பதவியேற்றார். 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
Related Tags :
Next Story