'நிர்பயா' நிதியில் ரூ.6 கோடி மட்டுமே செலவு என்பது அதிர்ச்சி அளிக்கிறது; மு.க. ஸ்டாலின் அறிக்கை


நிர்பயா நிதியில் ரூ.6 கோடி மட்டுமே செலவு என்பது அதிர்ச்சி அளிக்கிறது; மு.க. ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2019 6:58 AM GMT (Updated: 5 Dec 2019 6:58 AM GMT)

'நிர்பயா' நிதியில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிர்பயா என்பதற்கு பயமற்றவள் என்று பொருளாகும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க எந்த மாநிலத்திலும் நிதி செலவிடப்படவில்லை என்றும், 18 மாநிலங்களில் பேரிடர் நிவாரண நிதி பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.  மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதத்தை  கூட  மாநிலங்கள் பயன்படுத்தவில்லை என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.  தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் ரூ. 6 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நிர்பயா' நிதியில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளது என்று வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.  பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story