தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள் - திமுகவில் இணைந்த பின் பி.டி. அரசகுமார் பேட்டி
தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள் என்று பி.டி. அரசகுமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜக மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பின் பி.டி. அரசகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் வெளிப்படுத்தினேன், இதனால் சிலர் என்னை அருவெறுக்கத்தக்க வகையில் பேசினர். திமுகவில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள். சுயமரியாதையை இழக்க தயாராக இல்லை, அது பாஜகவில் எனக்கு ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story