திரிபுராவில், தாத்தாவை கார் ஏற்றி கொன்றுவிட்டு: சிறுமியை கடத்திய காதலன் - சென்னை போலீசாரிடம் சிக்கினார்
திரிபுராவில் தாத்தாவை காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, 16 வயது சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய காதலனை சென்னை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சென்னை,
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜப் அலி (வயது 22). இவர், தனது ஊரை சேர்ந்த 16 சிறுமியை காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் முடிவு செய்தார். ஆனால் சிறுமியின் பெற்றோர் இந்த காதலை ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாலிபர் ராஜப் அலி, தனது காதலியான 16 வயது சிறுமியை சொந்த ஊரில் இருந்து காரில் ஏற்றி கடத்தினார்.
இதை பார்த்த சிறுமியின் தாத்தா காரை போகவிடாமல் மறித்து கலாட்டா செய்தார். உடனே அவர் மீது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, வாலிபர் ராஜப் அலி, அச்சிறுமியை சென்னைக்கு கடத்தி வந்துவிட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் தனது அண்ணன் தங்கியிருக்கும் அறையில் சிறுமியுடன் ராஜப் அலி தங்கினார். தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். 3 மாதங்கள் இங்கிருந்துவிட்டு பின்னர் தனது இருப்பிடத்தை கும்பகோணத்துக்கு மாற்றினார். அங்கு ஒரு ஓட்டலில் வேலைசெய்துகொண்டு சிறுமியோடு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினார்.
திரிபுரா போலீசார் வாலிபர் ராஜப் அலி மீது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவுசெய்து அவரை தேடிவந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராஜப் அலி, சிறுமியுடன் தேனாம்பேட்டையில் அவரது அண்ணனுடன் வசிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திரிபுரா போலீசார் தேனாம்பேட்டை போலீசுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர்.
தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். ராஜப் அலியின் அண்ணனை பிடித்து விசாரித்தனர். அவர் மூலம் கும்பகோணத்தில் வசிக்கும் ராஜப் அலியை நேற்று முன்தினம் தேனாம்பேட்டை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து சிறுமி மீட்கப்பட்டார். ராஜப் அலியையும், சிறுமியையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சிறுமி குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று திரிபுரா மாநிலத்தில் இருந்து தனிப்படை போலீசார் தேனாம்பேட்டை வந்தனர். அவர்களிடம் வாலிபர் ராஜப் அலி ஒப்படைக்கப்பட்டார். கோர்ட்டு அனுமதி பெற்று ராஜப் அலி மற்றும் அவர் கடத்திவந்த 16 வயது சிறுமியையும் இன்று (வெள்ளிக்கிழமை) போலீசார் திரிபுரா மாநிலத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.

Related Tags :
Next Story