புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி அறிவித்தது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவால், தேர்தலை நடத்துவதற்கான தடைகள் முற்றிலும் விலகியுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளிவரும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story